ஒரு சில கோவில்களுக்கு எல்லாராலும் செல்ல முடியாது, பல தடைகள் வரும். அப்படி தடைகளை மீறி சென்றால் பல பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில், பழனிக்குப் யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். பழனியில், செவ்வாயின் கதிர்வீச்சு அதிகம் இருப்பதால் இந்த மூன்று ராசிகளை சேர்ந்தவர்கள் அங்கு சென்று வந்தால் அவர்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் உண்டு. பொதுவாக, பழனி கோவிலில், செவ்வாய் தோஷம் உடையவர்கள் செவ்வாயன்று போகரை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மேஷம்: எதிரிகள் தொல்லை இருக்கும் மேஷ ராசி மற்றும் மேஷ லக்னகாரர்கள், பழனியில் உள்ள பாலதண்டாயுதபாணியை தரிசிப்பது நல்லது. இதனால் அவர்களுக்கு எதிரிகளின் தொல்லை நீங்கும். அது மட்டும் இல்லாமல், தொழில் வளம் பெருகி, கோடீஸ்வரராகும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
மிதுனம்: அடிக்கடி தங்களது வாயில் இருந்துவரும் கடும்சொற்களால் பலரை காயமாக்கிவிட்டு பின் வருத்தப்படுபவர்கள் மிதுனராசிக்காரர்கள். பொதுவாக அதிர்ஷ்டம் வராத இவர்கள், பழனி தண்டாயுதபாணியை வழிபட்டு வந்தால் நாக்கு வன்மை அதிகரித்து, தொழில் வளம் பெருகும். அது மட்டும் இல்லாமல், பணவரவு அதிகரிக்கும்.
விருச்சிகம்: செவ்வாயின் கதிர்வீச்சு அதிகம் இருக்கும் இடம் பழனி. இதனால், அதிகமாக கோபப்பட்டு பேசும் தன்மை கொண்ட விருச்சிகராசிக்காரர்கள், போகரையும், பழனி முருகனையும் வழிபட்டால் சாந்தம் பெறுவார்கள். மேலும், தொழில்வளம் கைக்கூடி, கோடீஸ்வரராவார்கள்.