த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்ததும் மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதனைத்தொடர்ந்து 100 அடி உயர கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டது. ஆரவாரமுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தவெக தலைவர்கள் விஜய் உட்பட அனைத்து தொண்டர்களும் எழுந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். பின்னர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப்பாடல் வெளியிடப்பட்ட நிலையில், “வெற்றி… வெற்றி…” எனத் தொடங்கும் கொள்கைப்பாடல் வெளியிடப்பட்டது. மதசாப்பற்ற சமூகநீதி கொள்கை வழியில் 5 தலைவர்களை கொண்டு தவெக பாடல் உறுவாக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயின் தோளை பிடித்து பெரியார் வழிநடத்துவதை போல கிராப்பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப்படலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாட்சியார், அஞ்சலையம்மாள், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தவெக கொள்கைப்பாடலில் ‘சாதி,மத,பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாய மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையோடு, Secular Social Justice Ideologies ஓட தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க நான் வரேன்..’ என விஜயின் குரல் இடம்பெற்றுள்ளது.
Read more ; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தலைப்பில் கொள்கை பாடல் வெளியீடு..!!