fbpx

பெரியார் பல்கலை. சர்ச்சை..! இதுதான் விடியா அரசின் திராவிட மாடலா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் பல்கலை. சர்ச்சை..! இதுதான் விடியா அரசின் திராவிட மாடலா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்களே பாரீர், ‘பெரியாரின்’ பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Chella

Next Post

#Breaking : முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை.. மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்...

Fri Jul 15 , 2022
முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் […]
அதிகரிக்கும் கொரோனா தொற்று..! ஆபத்தை உணராத மக்கள்..! முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!

You May Like