பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில், விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒரு சென்ட் நிலம் வைத்து இருந்தாலும், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அது உங்களது தான் என்று சொல்லும் துறைதான் வருவாய்த்துறை. சான்றிதழ்கள் வழங்குவது பெரிய பணி என்று தெரிவித்தார். ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் 4,65,000 சான்றிதழ் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாவும், முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், தற்போது 785 சான்றிதழ் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை என்றும், 7 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா இல்லை என்பதோடு, தந்தை பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்றும், இப்போது அனைவருக்கும் பட்டா கொடுக்கவுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார். 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டதாவும், இதை ஒழுங்குபடுத்தி துறையை சீர்திருத்தம் செய்யுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறினார்.