fbpx

தமிழகத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை!…. தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு அதிரடி!

தற்கொலை சம்பவங்களை குறைக்கும் வகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளித்த பரிந்துரையின் பேரில் அதிக நச்சுத் தன்மை வாய்ந்த மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய ஆறு பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பூச்சிக் கொல்லி மருந்து குறித்து உயர்மட்டக் குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது. அதன் அப்படையில் குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Kokila

Next Post

கள்ளக்காதல் விவகாரம்?... இளைஞர் மீது ஆசிட் வீசிய பெண்!... 50% தீக்காயங்களுடன் இளைஞருக்கு தீவிர சிகிச்சை!

Sun Mar 12 , 2023
ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26), இவர் பெருந்துறை உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் பெருந்துறையில் இருந்து வரும்போது காதல் பிரச்சினை காரணமாக தன் […]

You May Like