fbpx

டிடெட் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி…! தமிழக அரசு அரசாணை…!

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30-ம் தேதிக்குள் பெற்று, அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மொத்தமாக 1050 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டது. 2019-2020-ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை சார்ந்து அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை வெளியிட்டுள்ளது.

தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் 12 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 மாணவர் சேர்க்கை இடங்களும், 24 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1450 மாணவர் சேர்க்கை இடங்களும் ஆக மொத்தம் 36 நிறுவனங்களில் 2430 இடங்கள் மட்டுமே 2024-2025 ஆம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும், 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1050 இடங்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 440 மாணவர் சேர்க்கை இடங்களும், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 250 மாணவர் சேர்க்கை இடங்களும் நிரப்பப்பட வேண்டியுள்ளது. ஆக மொத்தம் 1740 மாணவர் சேர்க்கை இடங்கள் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு சேர்க்கை செய்யப்பட வேண்டியுள்ளது. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இணையதள (Online) வழியாக மாணவர் சேர்க்கை செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30-ம் தேதிக்குள் பெற்று, அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

இது ரொம்ப கடினம்!... உழைப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை!… ஃபிட்னஸ் குறித்து தல தோனி ஓபன் டாக்!

Wed May 22 , 2024
Dhoni: துபாயில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தோனியின் உரையை, யூடியூப் சேனல் ஒன்று பகிர்ந்துள்ளது. கேப்டன் கூல் என அழைக்கப்படும் எம்.எஸ். தோனி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மிகவும் சிறந்தது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் எக்ஸ் (X) தளத்துக்குப் பதிலாக இன்ஸ்டாகிராம் (Instagram) அதிகமாக விரும்புவதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எம்.எஸ். தோனிக்கு எதிராக வதந்திகள் பரப்பி வருகின்றன. […]

You May Like