fbpx

விமானத்தில் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி.. பாதியில் இறக்கப்பட்ட சம்பவம்..!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பயணியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மேற்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்சர் ஆலம் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்சர் ஆலம் மற்றும் அவரோடு மற்றொரு நபரும் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், அப்சர் விமான பணிப்பெண்ணிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்சர் மற்றும் அவரோடு பயணம் செய்த மற்றொரு சக பயணியும் விமானத்தில் இருந்து இறக்கப்படுவதாக முடிது செய்தது. 

இதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்புக் குழுவிடம் அவர்கள் இருவரையும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

விமான பாதுகாப்பு அதிகாரி குடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Rupa

Next Post

உலகின் பெரும் பணக்காரர்கள்.. 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட கௌதம் அதானி.. முதல் 3 இடங்களில் யார்..?

Tue Jan 24 , 2023
உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது… 500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் ப்ளூம்பெர்க் சமீபத்திய உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளது.. அவரின் நிகர சொத்து மதிப்பு, 188 […]

You May Like