தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்ற 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலையிலா கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம் செய்தார். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து, நாகர்கோவில் நாகராஜா கோயில் திடல் அருகே பிரச்சாரம் செய்தார். பின்னர், இரவு 7 மணியளவில் தென்காசி தொகுதியில், கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். முதற்கட்டமாக, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி தொகுதிகளில் வரும் மார்ச் 31ம் தேதி வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்ற 60 வயது முதியவர் lஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.