fbpx

’தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு துணையாக நிற்பேன்’..!! கௌதமிக்கு ஆதரவாக குதித்த அண்ணாமலை..!!

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆன போதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்ளிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நடிகை கெளதமி புகார் அளித்துள்ள நபருக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில், கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? கெளதமி கட்சியில் தொடர்வது அவரது தனிப்பட்ட உரிமை. கட்சியில் இருந்து விலகினால் அவருக்கு தேவையான உதவியை கட்சி செய்யும். கெளதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும். தனிப்பட்ட முறையில் நானும் அவருக்கு துணை நிற்பேன்” என்றார்.

Chella

Next Post

வடகிழக்கு பருவமழை..!! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்..!! மக்களே உஷார்..!! சுகாதாரத்துறை அலெர்ட்..!!

Wed Oct 25 , 2023
டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த போதும், டெங்கு பரவலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஏராளமான மக்கள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை […]

You May Like