fbpx

தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லிகள்.. கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக்கூடாதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் கடந்த 10 மாதங்களில் 111 பச்சிளம் குழந்தைகள் மர்மமான காரணங்களால் உயிரிழந்துள்ளன. உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், லக்னோவின் குயின் மேரி மருத்துவமனையின் ஆய்வில், கர்ப்பிணிப் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

”இந்த வயசுக்குள்ள குழந்தை பெத்துக்கணும்”..!! முதல்வரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை..!!

லக்னோவின் குயின் மேரி மருத்துவமனை நடத்திய ஆய்வில் கர்ப்பிணிப் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது தெரியவந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய 130 (சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் ) கர்ப்பிணிப் பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. பேராசிரியர் சுஜாதா தேவ், டாக்டர் அப்பாஸ் அலி மெஹந்தி மற்றும் டாக்டர் நைனா த்விவேதி ஆகியோரால் செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பொது இதழிலும் (Environmental Research General) வெளியிடப்பட்டது.

அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்ணும் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறைவாகவே காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சைவ உணவு சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரசாயன விவசாயம் தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பச்சை காய்கறிகள் மற்றும் பயிர்களில் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றனர்… மேலும் விலங்குகளுக்கும், ரசாயண ஊசிகள் செலுத்தப்படுகின்றன.. தாய்ப்பாலில் பூச்சிகளில் சேர்வதற்கு இதுவே முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.. குறிப்பாக அசைவ உணவு சாப்பிடும் பெண்ணின் தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து சைவப் பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

பூச்சிக்கொல்லிகள் குழந்தைகளை எப்படி சென்றடைந்தது? இதன் காரணமாகவே இறைச்சில் அல்லது காய்கறிகளை சாப்பிடாத புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் தாயின் பால் மூலம் பூச்சிக்கொல்லிகள் பரவுகின்றன.. இவை குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக் மாறி உள்ளது..” என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதங்கள் அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறிய முதன்மை வளர்ச்சி அலுவலர் (சிடிஓ) தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளார். தாய் மற்றும் சிசு இறப்பு அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தையும் இந்த குழு கண்டறியும்..

Maha

Next Post

"இது ஒரு தகவல் போர்" பிபிசி ஆவணப்படம் குறித்து ரஷ்யாவின் கருத்து...!

Tue Jan 31 , 2023
பிபிசி-யின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவணப்படம் குறித்து பிபிசி வெவ்வேறு முனைகளில் “தகவல் போரை நடத்துகிறது” என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி 2 பாகங்களாக சில நாட்களுக்கு முன் வெளியிடட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா […]

You May Like