fbpx

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா….? மத்திய அமைச்சரின் பதில் என்ன….?

நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு நிலையில் மாற்றங்கள் நிகழ்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தான் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அத்துடன் ஒரு வருடத்திற்குள் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகை செய்யும் என்ற தகவல்கள் கிடைத்திருக்கிறது. இத்தகைய நிலையில் தான் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவு பெற்றிருப்பது தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அமைச்சர் பதில் தெரிவித்ததாவது, தற்போது அது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடும் சூழ்நிலையில் நான் இல்லை இந்த விவகாரத்தில் ஒவ்வொருவருக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை அரசு நிச்சயமாக உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். மேலும் சர்வதேச சந்தையில் விலை சீராக இருந்தால் அடுத்த காலாண்டில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் என்னை விலையில் எந்த உயர்வும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காமல் அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தான் விலை குறைப்பு செய்ய வேண்டும் என்று அதிகம் குரல் கொடுக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.

Next Post

மாநில நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை….!

Sun Jun 11 , 2023
சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மகாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவற்றை அமித்ஷா வழங்குவார் […]

You May Like