fbpx

கிணற்றில் இருந்து ஊற்றெடுத்து வரும் பெட்ரோல்..!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!! எங்கு தெரியுமா..?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள 6 வீடுகளில் கிணற்று நீர் வித்தியாசமான சுவையுடன் வந்துள்ளது. இதனால், அந்த தண்ணீரை பயன்படுத்துவதை அப்பகுதி மக்கள் தவிர்த்துள்ளனர். இதையடுத்து, வீட்டு உபயோகத்திற்கு குழாய் நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. மேலும், இவரின் வீட்டின் எதிர்புறம் 300 மீட்டர் தொலைவில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது.

இதனால், அங்குள்ள சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் அந்த கிணற்றை அதிரடியாக மூடினர். மேலும், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் தண்ணீருக்குப் பதில் பெட்ரோல் வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே அப்பகுதி மக்களுக்கு, சொந்த செலவில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிணற்றில் பெட்ரோல் ஊற்றெடுப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

கஞ்சா போதையில் ஆடையை கழட்டி ஆபாசம்..!! திருமணமான பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sun Aug 6 , 2023
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் கூலி வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் தினமும் லாவண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  விக்னேஷின் டார்ச்சர் அதிகமானதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் லாவண்யா புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரையில் […]

You May Like