fbpx

கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது… விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர்  உத்தரவு ..

கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி வருவதையடுத்து பெட்ரோலை கேன்களில் விற்பனை செய்யக்கூடது என்று மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை , ராமநாதபுரம் , உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் , பாஜவினர். , நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகின்றது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை முடிவுக்கு கொண்டுவர விருதுநகரில் பெட்ரோல்களை கேனில் விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுசம்பவங்கள் நடக்கவில்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு வீசுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

#TnGovt: 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தால் பணியிட மாற்றம்...! அரசு அதிரடி உத்தரவு...!

Mon Sep 26 , 2022
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 1ஆம் தேதி , மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் […]

You May Like