பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாதிவிலைக்கு பெட்ரோல் வழங்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது.
பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது . திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பாதி விலைக்கு பெட்ரோல் போடப்பட்டது. தகவல் அறிந்து கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிச் சென்றனர். பங்கில் கூட்டம் அலைமோதியதை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி , பாதிவிலைக்கு அந்நிறுவனம் பெட்ரோல் வழங்கியது. இந்த தகவல் காட்டுத் தீ போல அங்குள்ள மக்களுக்கு சென்றடைந்தது. இதனால் அனைவரும் பெட்ரோல் பங்கிற்கு வந்தடைந்தனர்.
பெட்ரோல் சென்னையில் லிட்டருக்கு 102.63 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. எரிபொருட்களின் விலை ஏற்றத்தால் சமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.