தீவிரவாத நடவடிக்கைகளால் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சதி திட்டம் தீட்டியுள்ளதாக தேசிய புலனாய்வுக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகம் , கேரளா உள்ளிட்ட பல்வேற மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 93 இடங்களில் சோதனை நடத்தியதில் 106 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
இதனிடையே கேரளாவின்கொச்சியில் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக்குழு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த அமைப்பின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள், ஆரவாளர்கள் ஆகியோர் கேரளாவில் சட்டவிரோத நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மதங்களுக்கு இடையே மதக்குழுக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. ஜிகாத் எனப்படும் இஸ்லாமியர்கிள் போரின் ஒரு பகுதியாக ஆட்சியில் சதி திட்டம் தீட்டுகின்றது.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே அரசின் கொள்கைகளை தவறாக சித்தரித்து அரசின் மீது வெறுப்பைஏற்படுத்தும் கருத்துக்களை பரப்பிவந்தனர். இதன் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது வழக்குககள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமைப்பை சார்ந்தவர்கள் சமூக தலைவர்களை குறி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. சமூக வன்முறையை தடுக்கும் நோக்கத்தில் இந்த கைது நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மீதும் கைது செய்யப்பட்டவர்கள் மீதும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.