கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது., அதன் படி, உதவிப் பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள ஆசிரியர் அமைப்புகள், 2018-ம் ஆண்டுக்கான விதியை UGC திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
புதிய திருத்தங்கள் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிஎச்டி படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் அவர்களை கழக மானிய குழு உத்தரவிட்டிருந்தது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உதவி பேராசிரியர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச அளவுகோலாக NET/SET/SLET இருக்க வேண்டும்.