fbpx

5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!! மக்களே பாதுகாப்பான இடத்துக்கு போங்க..!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிக்கிறது.

இந்நிலையில், வைகை அணையில் இருந்து அதிகளவில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால், 5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதை அடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நீட்டிக்கப்படும் ரெட் அலர்ட்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை..? வானிலை மையம் வார்னிங்..!!

Tue Dec 19 , 2023
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு […]

You May Like