fbpx

Whatsapp | இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்! விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இல்லாமல் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இணைய இணைப்பின்றி மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இன்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரலாம். இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.

இந்த அம்சம் ப்ளூடூத் துணையுடன் செயல்படும். ஆஃப்லைன் ஃபைல் ஷேரிங் அம்சத்தை பயனர்கள் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே ஃபைல்களை அனுப்பவும், பெறவும் முடியும். அதற்கான பர்மிஷனை பயனர்கள் அனுமதி கொடுக்க வேண்டியதும் அவசியம். விரைவில் இந்த வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது.

Next Post

HBD Sachin | கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்..!! சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள்..!!

Wed Apr 24 , 2024
Sachin Tendulkar birthday: கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய ஆரம்ப காலக் கட்டத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆம், சச்சினின் முதல் ஆசையாக இருந்தது அதுதான். ஆனால், அவரை புகழ் பெற்ற பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி நிராகரித்துவிட்டார். இதன் பிறகே தனது பேட்டை எடுத்து சுழற்ற ஆரம்பித்தார் சச்சின். 1989 நவம்பர் 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் […]

You May Like