மகன் இன்பநிதி, காதலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவரின் தாயார் கிருத்திகா உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி, கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர். இவர் கால்பந்து போட்டிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிநாடு சென்றிருந்தார். அவரை முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார். உதயநிதி தமிழக அமைச்சரானதை தொடர்ந்து அடுத்து இன்பநிதி அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவரும் முதலமைச்சர் ஆவார் என எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்பநிதி தனது பெண் தோழியோடு நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் இந்த புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அன்பு செய்யவும், வெளிப்படுதவும் அச்சப்படாதே. இயற்கையை அதன் முழுத் தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழியாகும்” என தெரிவித்துள்ளார்.