fbpx

இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்..!! கமலை கட்டித்தழுவிய ரஜினி..!! 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும்..!!

உலகநாயகன் கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த், மகிழ்ச்சியில் அவரை கட்டித்தழுவிக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

தமிழ் சினிமாவின் சின்னமான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், ரசிகர்களால் பெரும்பாலும் போட்டியாளர்களாகக் கருதப்படுபவர்கள். நட்பு என்பது போட்டியைத் தாண்டியது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தயாராகும் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் நடைபெற்று வருகிறது. அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து ரஜினியும், கமலும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் செய்துள்ளார். கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும் அன்பும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக் கொண்டனர். தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Chella

Next Post

ரூ.60,000 கோடி..!! அந்த ஆடியோவை வெளியிட்டால் 10 நிமிடத்தில் பதவி இருக்காது..!! துரைமுருகனுக்கு எச்சரிக்கை..!!

Thu Nov 23 , 2023
அமைச்சர் துரைமுருகன், மணல் விவகாரத்தில் 60,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும், இதுதொடர்பான உண்மைகளை வெளியிட்டால் அவர் பதவி, 10 நிமிடத்தில் இருக்காது எனவும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள குடியாத்தம் குமரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் உத்தரவிட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதன் காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு அதிமுக […]

You May Like