fbpx

வந்தது அதிரடி உத்தரவு…! 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை….! மீறினால் நடவடிக்கை உறுதி…!

குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 01, 2023 வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளை இடைநிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, 2023 ஜனவரி 1 வரை அனைத்து வாரியங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படாது. அனைத்து தலைமையாசிரியர்களும் உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் தர்மவீர் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்பநிலை வீழ்ச்சி மற்றும் அடர்ந்த மூடுபனியுடன் கூடிய குளிர் காலநிலை நிலவுகிறது. இந்த நிலைமை 2023 ஜனவரி முதல் மாதம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

15,149 காலிப்பணியிடங்கள்..!! 2023-க்கான தேர்வு அட்டவணை..!! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

Thu Dec 29 , 2022
2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் […]
ஆசிரியர் தகுதித் தேர்வு..!! ஹால் டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..? முழு விவரம் உள்ளே..!!

You May Like