fbpx

கொலையில் முடிந்த குழாயடி சண்டை..!! வீடு புகுந்து கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு..!! பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சண்டை குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் அழுது கொண்டே புகார் சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கார்த்தி, இளங்கோவனின் வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்திருந்த கசாப்பு கடை அரிவாளால் இளங்கோனையும், அவரது மனைவி பத்மாவதியையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையிலும் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், தப்பி ஓடிய கசாப்பு கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! கள்ள ஓட்டு பதிவு..!! உடனே மாத்துங்க..!! அதிமுக பரபரப்பு புகார்..!!

Mon Feb 27 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு […]

You May Like