fbpx

கரையை கடந்த பைபர்ஜாய் புயல்..!! அடுத்த டார்கெட் எங்கு தெரியுமா..? வெள்ள அபாய எச்சரிக்கை..!!

அரபிக்கடலில் நிலைக் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குஜராத் மீட்புத் துறை ஆணையர் அலோக் பாண்டே தெரிவிக்கையில், “சவுராஷ்டிரா – கட்ச் வளைகுடாவை கடந்து சென்ற பைபர்ஜாய் புயல் தற்போது பாகிஸ்தான் – கட்ச் வளைகுடா அருகே உள்ளது. தற்போது அதன் சராசரி காற்று வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டராக குறைந்து இருக்கிறது. இதன் காரணாமாக மின் தடைகள் ஏற்படலாம். வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ள தகவலின்படி, இந்த புயல் தெற்கு ராஜஸ்தானை இன்று அடையும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குஜராத்தின் பரவலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. மீட்புப் பணிகளையும் மாநில அரசு தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடலோர குஜராத் பகுதியின் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.

Chella

Next Post

மாதம் ரூ.15,000 ஊதியம்…! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Fri Jun 16 , 2023
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது […]
அரசுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

You May Like