ஹவாய் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் வாட்டர்மேன் மற்றும் திரைப்பட நடிகரான தமாயோ பெர்ரி, சுறா கடித்ததால் 48 வயதில் காலமானார்.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த 49 வயதான நடிகர் தமாயோ பெர்ரி சுறா தாக்கி உயிரிழந்தார். அவரது மரணத்தால் சர்ஃப் உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. தமாயோ பெர்ரி நடிகர் மட்டுமல்லாமல் உயிர்காக்கும் வீரர் மற்றும் சர்ஃபிங் பயிற்றுவிப்பாளரும் ஆவார்.
தமாயோ பெர்ரி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோட் தீவு அருகே சர்ஃபிங் செய்து கொண்டிருக்கும்போது கடலில் இருந்த சுறா தாக்கியதில் படுகாயமடைந்து இறந்துள்ளார். கஹுகு அருகே உள்ள மலேகஹானா கடற்கரையில் சுறா கடித்ததில், ஒரு மனிதனைப் பார்த்ததாகக் கூறி, ஒருவர் புகாரளித்தார்.
அதன்பின், அவசர சேவைகள் மலேகஹானா கடற்கரைக்கு வந்தடைந்தன. மீட்புப் பணியாளர்கள் உதவிக்கு வந்து அவரை ஜெட் ஸ்கை மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர், ஆனால் சுறாக்கள் கடித்ததில் சம்பவ இடத்திலேயே பெர்ரி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சுறா கடித்ததால் தமாயோ பெர்ரியின் உடல் பாதிக்கப்பட்டிருந்தது.
தமாயோ பெர்ரி 1975 இல் பிறந்தார். அவர் 12 வயதில் சர்ஃபிங் செய்யத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர். ‘ப்ளூ க்ரஷ்’ மற்றும் ‘சார்லிஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராட்டில்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட தமாயோ பெர்ரியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.