fbpx

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000… தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்க திட்டம்…!

மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர்.

அனைவருக்கும் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை பல தரப்பினர் எழுந்து எழுந்து வரும் நிலையில் அதனை தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்பொழுது முதற்கட்டமாக மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக, தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதற்கான பணியும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட்!… சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி!

Tue May 21 , 2024
அக்டோபர் 7 தாக்குதல் உள்ளிட்ட போர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மற்றும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ஆகிய இருவருக்கும் கைது செய்ய வாரண்ட் விண்ணப்பத்தை வழக்கறிஞர் கரீம் கான் அளித்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஹமாஸ் படைகளின் அரசியல் தலைவர் Ismail Haniyeh, தலைமை ராணுவ அதிகாரி Mohammed Deif ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்றே தகவல் […]

You May Like