fbpx

என்னை கொன்று நர மாமிசம் சாப்பிட திட்டம்..!! குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்

நாளுக்கு நாள் உலகம் முழுவதுமே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினர் எதற்கெடுத்தாலும், அப்போதே தீர்வு காண துடிக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். அதற்கு முந்தைய வாரம், இந்திய மாணவி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். இந்நிலையில், தனது மொத்த குடும்பத்தையும் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையுமே வெறித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளார். தங்களை, தங்களது மகன் கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, கையில் துப்பாக்கியுடன் இளைஞர் இருந்துள்ளார். அவர் அருகே 4 பேர் சடலமாக கீழே கிடந்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

18 வயதான சீசர் ஒலால்டே, தனது தந்தை ரூபன் ஒலால்டே, தாய் ஐடா கார்சியா. லிஸ்பெட், ஆலிவர் என்ற இரு சகோதரர்கள் என 4 பேரையும் கொடூரமாக சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது. எதற்காக இந்த கொலைகள் என்கிற போலீசார் விசாரணையில், மேலும் அதிரும் விதமாக, தன்னை தனது குடும்பத்தினர் கொன்று சாப்பிட திட்டமிட்டார்கள். தனது குடும்பத்தாருக்கு நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில், அந்த குடும்பம் கடுமையான உழைப்பாளிகள், மிகவும் நல்லவர்கள், இளைஞர் மனபிறழ்வில் இப்படி உளறுகிறார் என்றனர். இளைஞர் சீசரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Chella

Next Post

ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்த மெட்டா நிறுவனம்..!! ஷாக்கிங் தகவல்..!!

Thu Jun 1 , 2023
ஊழியர்களை பணிநீக்கம் செய்ய, 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக மெட்டா நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை, பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கத்திற்காக, செலவு செய்யப்பட்ட தொகையை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

You May Like