fbpx

மனித இரத்தத்தில் பிளாஸ்டிக்!… ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!… என்ன காரணம்?… வெளியான அதிர்ச்சி தகவல்!

மனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சிராளர்கள் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளனர். அந்த ஆய்வின் மூலம் மனித இரத்தத்தில் பிள்ஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டதது. இதையடுத்து தற்போது மனித இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு காரணம் பிளாஸ்டிக் பைகளில் உணவுகள் வாங்கி சாப்பிடுவது, பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடிப்பது, குளிர்பானங்கள் குடிப்பது போன்ற பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளினால் தான் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள் கலந்துள்ளது.

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை சம்மதத்துடன் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினர். இவர்களது உடலில் இருந்து இரத்தம் எடுத்து பரிசோதிக்கப்பட்ட பொழுது 17 பேர்களின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மனித இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மனித இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பதால் என்னென்ன உறுப்புகள் பாதிக்கப்படும் என்பதை பற்றி நெதர்லாந்து ஆராய்சியாளர்கள் அடுத்தகட்ட ஆய்வை படத்தி வருகின்றனர்.

Kokila

Next Post

எருக்கம் இலையில் இப்படி ஒரு மகிமையா?... இனிமேல் சர்க்கரை நோயே வராது!... அதை இப்படி பயன்படுத்துங்க!

Fri May 26 , 2023
எருக்கம் இலையை வைத்து சுலபமாக நமது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கலாம். இது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்காததுதான் காரணம். குறைவாக சுரப்பது அல்லது அதிகமாக சுரப்பது, பரம்பரையாக சர்க்கரை நோய் வருவதும் அடிப்படை காரணங்கள். இந்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்புகள் மற்றும் சர்க்கரையினால் ஏதாவது புண்கள் […]

You May Like