சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற எட்டு ரெயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் இன்று முதல் அதிகரித்துள்ளது. விழாக்காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூயாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 2023-ஆம் வருடம் ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.