fbpx

வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது!… இதை மட்டும் செய்யாதீர்கள்!… தல தோனி பேச்சு!

வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது எனவும் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பேன் அதனால் என்மீது உங்கள் பார்வை இருக்கவேண்டும் என்றும் தல தோனி பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி 15 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இதையடுத்து, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, ஐபிஎல் தொடர் மிகப் பெரியது, மற்ற தொடர்களை போல இந்த தொடரின் இறுதிப் போட்டி என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வெற்றிகள் எல்லாம் எங்களின் 2 மாத கடின உழைப்பு தான் காரணம். இதற்கு அனைவரும் பங்களித்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய தோனி, வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பேன். என் உணர்வுகளுக்கு தோன்றும் விதமாக நான் ஃபீல்டிங்கை அமைப்பேன். அது பல நேரங்களில் அணிக்கு பயனளித்தும் உள்ளது. இதனால், நான் ஃபீல்டர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, உங்களின் கவனம் எப்போதும் என் மீது இருக்க வேண்டும், கேட்ச் விட்டால் கூட நான் பெரிதும் ரியாக்ட் செய்ய மாட்டேன், ஆனால், என் மீது இருந்து பார்வையை மட்டும் எடுத்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

இனிமேல் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள்!... புவி வெப்பமடைதலை தடுக்க பிசிசிஐயின் புதிய முயற்சி!

Thu May 25 , 2023
பிசிசிஐயின் பசுமை விழிப்புணர்வாக, நடப்பு ஆண்டு பிளே ஆப் சுற்றுகளில் போடப்படும் டாட் பால்கள் ஒவ்வொன்றிற்கும், 500 மரங்கள் நடப்படவுள்ளன. சென்னை – குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் டாட் பால் வந்தபோதெல்லாம் மரக்கன்றுகள் காண்பிக்கப்பட்டது. இது எதற்காக என்று பலரும் குழப்பமான சூழ்நிலையில் இருந்ததை அடுத்து இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிளே ஆப் சுற்று தொடங்கியது. முதலாவது […]

You May Like