fbpx

வீடியோவை டெலீட் பண்ணுங்க..!! யூடியூப் சேனலிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்..!! கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்..!!

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இசையமைப்பாளர் டி இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், ‘இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார். இது குறித்த பேச்சு தான் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், டி.இமான் வைத்த குற்றச்சாட்டை அடுத்து சிவகார்த்திகேயனை செம்மையாக கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். எனினும், சிவகார்த்திகேயன் இதுவரை மௌனம் கலைக்கவில்லை. அதேசமயம் பேட்டி வெளியானதை அடுத்து, இமானிடம் அந்த யூடியூப் சேனலை தொடர்புகொண்டு வீடியோ டெலிட் செய்ய சொல்லும்படி சிவகார்த்திகேயன் கெஞ்சியதாக ஒரு தகவல் அண்மையில் தீயாக பரவியது.

ஆனால் ‘சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை, அவர் இமானிடம் கெஞ்சவும் இல்லை’ என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், ‘பேட்டியை நீக்கச்சொல்லி இசைமான் மற்றும் யூடியூர் சேனலிடம் பலமுறை கெஞ்சிய மாவீரன். எந்த பருப்பும் வேகவில்லை. 1 மில்லியன் வியூக்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னடா இது குடும்பங்கள் கொண்டாடும் இளவரசனுக்கு வந்த சோதனை’ என குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

'இதெல்லாம் நியாயமே இல்ல’..!! காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த ஆளுநர் மாளிகை..!!

Thu Oct 26 , 2023
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், ராஜ்பவன் மெயின்கேட் அருகே காவலர்கள் பாதுகாப்பு அலுவலில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் நுழைவு வாயில் எண் 1-ன் எதிர்புறம் நின்றவாறு 2 பெட்ரோல் […]

You May Like