fbpx

Bihar: தயவு செய்து பாஸ் மார்க் போடுங்க!… இல்லாவிடில் என் தந்தை திருமணம் செய்து வைத்துவிடுவார்!… வைரலாகும் மாணவியின் விடைத்தாள்!

Bihar: தயவு செய்து பாஸ் மார்க் போடுங்கள், இல்லாவிட்டால் என் தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார் என்ற கோரிக்கையுடன் 10ம் வகுப்பு மாணவி ஒருவரின் விடைத்தாள் வைரலாகி வருகிறது.

பீகாரில் கடந்த மாதம் 15-ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. அம்மாநிலத்தை பொறுத்தமட்டில் 10-ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு என 2 வகைகளாக தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சி என்பது அமையும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் 10-ம் வகுப்பு மாணவியின் விடைத்தாள் வைரலாகி பரவி வருகிறது.

இதுதொடர்பாக அந்த மாணவி தனது விடைத்தாளில், “எனது அப்பா ஒரு விவசாயி. அவருக்கு குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது. இதனால் எனது கல்வி செலவை அவரால் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அவர் என்னை படிக்க வைக்க விரும்பவில்லை. நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறி வருகிறார். அதையும் மீறி தான் நான் படித்து வருகிறேன். மேலும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி” என தெரிவித்துள்ளார்.

விடைத்தாளில் மாணவி வைத்த இந்த கோரிக்கை தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த மாணவி தனது குடும்ப சூழல் குறித்த விபரத்தை தேர்வு விடைத்தாளில் எழுதி இருக்க இன்னும் பல மாணவர்கள் பாடல்கள், கதைகளை விடைத்தாளில் எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, மாணவ – மாணவிகள் இதுபோன்ற கோரிக்கையை வைப்பது என்பது முதல் முறையல்ல. அவ்வப்போது இத்தகைய கோரிக்கை என்பது விடைத்தாளில் இருக்கும். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் மதிப்பெண்கள் வழங்குவது இல்லை. விடை சரியாக இருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Readmore: என்னையே ஏமாற்றிட்டானே!… பிரதமர் மோடி போட்ட ட்வீட்!… தலைமறைவான பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Kokila

Next Post

Paytm நெருக்கடி!… காலக்கெடு வந்துவிட்டது!… Paytm Payments வங்கியின் 3 கோடி கணக்குகளை எந்த வங்கி பெறும்?

Wed Mar 13 , 2024
Paytm Payments வங்கியில் டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 15 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது, எனவே 2 நாட்களுக்குள் Paytm சில பார்ட்னர் வங்கியை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் Paytm, பேமெண்ட்ஸ் வங்கியின் கணக்குகள் எந்த வங்கிக்கு வழங்கப்படும் என்பதை இன்னும் முடிவு செய்ய முடியவில்லை. தற்போது, ​​ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, யெஸ் […]

You May Like