11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளது. வரும் 26 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடப்பாண்டு 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.
முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 6 முதல் 13-ம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்படும். பின்னர் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படும். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியிடப் படும். மேலும் வரும் 26 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. முதலில் மொழி பாடமான தமிழ் தேர்வு நடைபெற உள்ளது.