fbpx

இன்ஸ்டாகிராம் காதலால் குழந்தை பெற்றெடுத்த பிளஸ்1 மாணவி..!! ஆசைவார்த்தைக் கூறி அடிக்கடி உல்லாசம்..!!

11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கும், அவரது உறவினரான 21 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், சிறுமி கர்ப்பமடைந்தார். இதனை பெற்றோரிடம் கூறாமல் சிறுமி மறைத்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் காதலால் குழந்தை பெற்றெடுத்த பிளஸ்1 மாணவி..!! ஆசைவார்த்தைக் கூறி அடிக்கடி உல்லாசம்..!!

இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் வந்து பார்த்துள்ளனர். அப்போது கழிவறையில் சிறுமி குழந்தையுடன் மயங்கி கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றிய தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், 17 வயது சிறுமி குழந்தை பெற்று எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்..!! செருப்பு மாலையுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள்..!!

Fri Sep 30 , 2022
வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை, கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் துகாராம். இவர், வகுப்பறையில் உள்ள மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், […]
மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்..!! செருப்பு மாலையுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள்..!!

You May Like