fbpx

மாணவர்களே ரெடியா..! பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! எப்படி எங்கே பார்க்கலாம்…!

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது. அதன்படி, தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://www.dge.tn.gov.in மற்றும் https://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Read More: 60 வயதை கடந்தாலும், இளமையாக இருக்கும் நீதா அம்பானி..! ரகசியம் என்ன…!

Rupa

Next Post

பிரபல டைட்டானிக் பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்...!

Mon May 6 , 2024
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான டைட்டானிக் மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் நடிகர் பெர்னார்ட் ஹில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நடிகரும் பாடகியுமான பார்பரா டிக்சன் இந்த செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். “பெர்னார்ட் ஹில்லின் மரணத்தை நான் மிகவும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன். ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ மற்றும் பெர்ட், வில்லி ரசல் அற்புதமான நிகழ்ச்சி 1974-1975 இல் […]

You May Like