fbpx

பிளஸ் 2 பொதுத்தேர்வு!… விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!… பள்ளிக்கல்வித்துறை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை அங்கீகரிக்கவும் இல்லை!... ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை!... மத்திய அரசு!

Wed Mar 29 , 2023
ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்றும் இதனை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017ம் ஆண்டு முதல் போட்டியை நடத்தி வருகிறது. மேலும், இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு […]

You May Like