புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பப்பட் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பப்பட் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கிரிஷ் பப்பட், பணிவான மற்றும் கடினமாக உழைக்கும் தலைவராக திகழ்ந்து சமூகத்திற்கு தொடர்ந்து சேவைகளை செய்தார்.
மகாராஷ்டிரா மாநில வளர்ச்சிக்காக அவர், பெரிய அளவில் பணியாற்றினார். குறிப்பாக, புனேவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் அவர் செயல்பட்டார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
கிரிஷ் பப்பட், மகாராஷ்டிராவில் பாஜகவை கட்டமைக்கவும், வலுப்படுத்தவும் முக்கிய பங்காற்றினார். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பியதுடன், எளிதில் அணுகக்கூடிய சட்டப்பபேரவை உறுப்பினராக திகழ்ந்தார். திறன் வாய்ந்த அமைச்சராகவும் அவர் செயலாற்றி இருப்பதுடன், பின்னர் புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.