PM Kisan: பிஎம் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகையை கணவன் – மனைவி இருவரும் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் , மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இத்தொகை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் 17 தவணைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. தற்போது 18வது தவணை அடுத்த மாதம் வெளியாகலாம் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில், இந்தத் திட்டம் தொடர்பாக மக்கள் மனதில் பல வகையான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. இதில் ஒன்று, மத்திய அரசின் இந்த திட்டத்தை கணவன்-மனைவி இருவரும் இணைந்து பயன்படுத்திக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பலன் நிலம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவருக்கு மட்டுமே கிடைக்கும். பெண்ணின் பெயரில் நிலம் இருந்தால் மட்டுமே, இத்திட்டத்தின் பலன் பெண்களுக்கு கிடைக்கும்.
Readmore: டெல்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்கிறார் அதிஷி!. மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா!.