fbpx

PM Kissan: விவசாயிகளுக்கு 17-வது தவணை தொகை வழங்குவதில் சிக்கல்…! என்ன காரணம் தெரியுமா…?

மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்திலும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 17-வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் எப்பொழுது செலுத்தப்படும் என்ற கேள்வி தற்போத எழுந்துள்ளது.

17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகிறது‌. இதன் காரணமாக தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பாஜக ஆட்சி அமையாவிட்டால் இந்த திட்டம் தொடருமா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

Cancer: அதிர்ச்சி!... பிரிட்டன் இளவரசிக்கு புற்றுநோய் பாதிப்பு!

Sat Mar 23 , 2024
Cancer: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத்மிட்டில்டன் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்மிட்டில்டன். இவருக்கு வயது 42. கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ […]

You May Like