fbpx

வாழ்க்கையிலும் மாணவர்களை முன்னேற்றமடைய செய்ய வேண்டும்… பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களிடம் மாணவர்களை அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆசிரியர் பெருமக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது  அவர் , ஆசிரியர்களின் முன்பு பேசுகையில் ’’ வாழ்க்கையிலும் மாணவர்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கல்விச் சூழலை வலுப்படுத்த இந்தியா வலுவான திசையில் செல்கின்றது. ஆசிரியர்கள்தான் மாணவர்களின் மிகப் பெரிய நேர்மறை ஆற்றல் , ஒரு மாணவர் எவ்வளவு பலவீனமாக உள்ளார் என்பது அவசியமில்லை , உன்னால் முடியும் , என மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினாலே போதும். ஆசிரியர்கள் ஒரு மாணவரை கனவுகாண வைக்கின்றார் பின்னர் அந்த கனவுக்கு ஒரு வடிவத்தை அளித்து கனவை நிஜமாக்க உதவியாக உள்ளார். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மிகச் சிறந்தவராக இருக்கின்றார் என்பதை புரியவைக்க வேண்டும். அவர்களின் பலம் , திறமை பற்றி அவர்களிடம் எடுத்து கூற வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும் அவர்களின் வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் ஆதரவு அளித்து உதவ வேண்டும். ஒரு வெற்றிகரமான ஆசிரியர் என்றார் மாணவனை தனக்கு இணையாக பாவித்து அவர்களுடன் ஒத்திருப்பதுதான். என்றார்.

பிரதமர் மோடி 2047 ம் ஆண்டுக்கான நோக்கம் குறித்து பேசுகையில் பிரிட்டிஷிடம் இருந்து சுதந்தரம் பெற்று 2047உடன் 100 ஆண்டுகளாகவிடும். அப்போது ஒரு மாணவர் கூட கனவே இல்லை என்ற நிலையில் இருக்க கூடாது. எனவே 2047வது ஆண்டு பற்றியும் நோக்கத்தை பற்றியும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பேச வேண்டும். அவர்கள் நாட்டுக்காக என்ன செய்ய உள்ளார்கள் என்பதை பற்றி கேட்க வேண்டும். என்றார்.

Next Post

தமிழகத்தைச் சேர்ந்தவர் நல்லாசிரியர் விருது பெற்றார்... புதுவை நபருக்கும் விருது வழங்கப்பட்டது...

Mon Sep 5 , 2022
டெல்லியில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது விழாவில் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இந்த நாளில் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் மொத்தம் 46 பேருக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் […]

You May Like