இந்திய பிரதமராக கடந்த 2014-இல் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
பிரஃபுல் பி சர்தா என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) இரண்டு கேள்விகள் கேட்டுள்ளார். அதாவரது மோடி பிரதமரானதில் இருந்து எத்தனை நாட்கள் பதவிக்கு வந்தார்? என்று கேட்டுள்ளார். அதற்கு ஆர்டிஐ, பிரதமர் எல்லா நேரத்திலும் கடமையில் இருக்கிறார். அவர் பதவியேற்றதில் இருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
அடுத்ததாக பிரதமராக பதவியேற்ற பிறகு இன்று வரை பிரதமர் மோடி எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்..? அதற்கு ஆர்டிஐ, 3,000-க்கும் மேல் என கூறியுள்ளது. பிரதமரின் செயல்பாடுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் கூறினார். அவர் கூறுகையில், ”இந்த நேரத்தில் பிரதமர் மோடியைப் போன்ற ஒருவரைக் கொண்டிருப்பது நாட்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக நான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், அவர் பிரதமர் என்பதாலும், அவரது அமைச்சரவையில் நான் உறுப்பினராக இருப்பதாலும் இதை நான் கூறவில்லை என்றார். கடந்தாண்டு மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பிரதமர் மோடி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்று கூறியிருந்தார். 2016இல் இதே போன்ற ஆடிஐ அதே பதிலை கூறியிருந்தது. அப்போது, விண்ணப்பதாரர் ஒருவர், நாட்டின் பிரதமருக்கான விடுப்பு விதிகள் மற்றும் நடைமுறைகளின் நகலை அமைச்சரவை செயலகத்திடமும் கேட்டிருந்தார்.
முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய், ஹெச்.டி.தேவே கவுடா, ஐ.கே.குஜ்ரால், பி.வி.நரசிம்மராவ், சந்திரசேகர், வி.பி.சிங் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் ஏதேனும் விடுப்பு எடுத்துள்ளார்களா? ஏதேனும் பதிவுகள் உள்ளதா? என்பதையும் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்தார். முந்தைய பிரதமர்களின் விடுப்புப் பதிவு தொடர்பான தகவல்கள், இந்த அலுவலகம் வைத்திருக்கும் பதிவுகளில் ஒரு பகுதியாக இல்லை. இருப்பினும், தற்போதைய பிரதமராக இருக்கும் மோடி பொறுப்பேற்ற பிறகு எந்த விடுமுறையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.