டெல்லியில் கடந்த 2020 ஆம் வருடம் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 மணிக்கு தொடங்கியது.
ஆனாலும் அதற்கு முன்னதாகவே பாரம்பரிய சடங்குகள் இன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காலை 7.15 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் வருகை தந்தார்.
இதற்க்கிடையே நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி உட்பட அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர் பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்குள் பிரவேசித்த போது அமைச்சர்கள் பலத்த கரகோஷங்களுடன் வரவேற்பு வழங்கினர்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவைத்தலைவர் உரையாற்றினார்.