fbpx

PM Modi | ’இது வெறும் ட்ரெய்லர் தான்’..!! ’இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு’..!! பிரதமர் மோடி அதிரடி..!!

கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு செய்தவை ஒரு ‘ட்ரெய்லர்’ மட்டுமே என்று பீகாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்குள்ள ஜமுய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் செய்யப்பட்டவை அனைத்தும் வெறும் ட்ரெய்லர் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கோதுமைப் பொருட்களுக்கு கூட போராடும் சிறிய நாடுகளின் பயங்கரவாதிகள், இஷ்டத்துக்குத் தாக்குவர். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இந்தியா பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது. ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை வழங்குகிறோம் என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களால் (லாலுபிரசாத் யாதவை குறிப்பிடுகிறார்) பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.

ஒருபுறம் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது பற்றி பேசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. மறுபுறம், கடத்தல் தொழில் மட்டுமே புகழ் பெற்றதாகக் கூறும் நபர்களும் உள்ளனர். ஒருபுறம் சூரிய மின்சக்தி மற்றும் எல்இடி விளக்குகள் பற்றி பேசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள திமிர்பிடித்த தலைவர்கள், பீகாரை மீண்டும் விளக்கு யுகத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Read More : தம்பி..!! இந்த சேட்டை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத..!! அண்ணாமலையை எச்சரித்த சீமான்..!!

Chella

Next Post

கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் அறிமுகம்!

Thu Apr 4 , 2024
கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.  விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் விரைவில் […]

You May Like