fbpx

PM Modi | ”திமுகவின் ஆட்சியை பார்த்து மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது”..!! பிரதமர் மோடி தாக்கு..!!

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவின் நல்லாட்சி பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குறிய விஷயம். அதேபோல் திமுக ஆட்சியில் மக்கள் சலிப்படைந்துள்ளதும் உண்மை தான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை மிகுந்த நம்பிகையுடன் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி பயணம் மேற்கொண்டார். பாஜக பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’சாதி, மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம்’..!! ’அதற்கு பேசாமல் தோற்பதே பெருமை’..!! சீமான் அனல் பறக்கும் பேச்சு..!!

Chella

Next Post

Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Fri Mar 29 , 2024
நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1,000 ரூபாய் வரை கொடுப்பதாகவும், இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு […]

You May Like