ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
பெங்களூரு ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கொரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்தில் சிக்கியது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது 288ஆக அதிகரித்திருப்பதாகவும் மேலும் 900க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது மீட்பு பணிகள் தொடர்ந்து. நடைபெற்று வருகிறது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மீட்டிப் பணிகளை துரிதப்படுத்தி கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒடிசா மாநில ரயில் விபத்து குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்த கொடூர விபத்து எப்படி நிகழ்ந்தது? மீட்பு பணி மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை என்ன? மீட்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, நிவாரணம் உள்ளிட்ட விவரங்கள் போன்றவற்றை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் தான் இந்த கொடூரமான கோர விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து இருக்கிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. விபத்து நடைபெற்ற பாகநாகா பஜார் ரயில் நிலைய ஆய்வுக்குப் பிறகு கட் ஆகி இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது