fbpx

கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் பிரதமர் மோடி…!

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உ.பி.யில் வாராணசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாராணசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். வாராணசியில் 8-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாராணசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. உ.பி,யின் புனித நகரமான வாராணசியின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இன்றும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மாலை அணிவிக்க உள்ளார். நேற்று பிரதமர் மோடி பிரம்மாண்டமான ’ரோடு ஷோ’ வாராணசியில் நடத்தினார்.

Vignesh

Next Post

வந்தாச்சு...! காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு ரூ.4,000 அபராதம்... காவல்துறை அதிரடி முடிவு...!

Tue May 14 , 2024
காப்பீடு இல்லாத வாகனங்கள் கண்டறிந்தால் முதன்முறை குற்றத்திற்கு ரூ.2,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும். குற்றம் தொடர்ந்தால் ரூ.4,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கள அதிகாரிகள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு 196- படி […]

You May Like