fbpx

பிரதமர் மோடியின் உடல்நல ரகசியம்..!! இந்த ’டீ’யில் இவ்வளவு ஆரோக்கியமா..? எப்படி வீட்டிலேயே செய்வது..?

இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகின் பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் பிரதமர் இல்லத்தில் உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பேசியுள்ள பிரதமர் மோடி, தனது உடல்நிலை குறித்து சில சுவாரஸ்யங்களை தெரிவித்துள்ளார். அதாவது, ”விடிவதற்கு முன்பே தான் எழுந்து யோகா செய்வதாகவும், பின்னர் கதா டீ குடிப்பதாகவும் தெரிவித்தார். இந்த டீ தான், தனது ஆரோக்கியத்தை அதிகரித்து வருவதாக கூறினார். கொரோனா தொற்று இந்தியாவில் பரவிய போது, இந்த கதா டீயை குடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அப்போது நானும் இதை குடிக்கிறேன் என மக்களுக்கு சொன்னேன்.

கதா என்பது ஆயுர்வேத மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் போன்ற மருந்து என்றே சொல்லலாம். இது இமயமலை மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் துளசி, இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, கொத்தமல்லி, திராட்சை மற்றும் ஏலக்காய் உள்ளது. இவை அனைத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. அதனால் தினமும் ஒரு முறை குடித்து வந்தால், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த பானத்தை குடித்தால், தொற்று நோய் வராது. செரிமானம் மேம்படும். உடல் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேவையான பொருட்கள் :

துளசி இலைகள் – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், இலவங்கப்பட்டை – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 டீஸ்பூன், கருப்பு மிளகு – 1 டீஸ்பூன், சிறிது திராட்சை, தண்ணீர் – 2 முதல் 3 கப், தேன் அல்லது வெல்லம் (இது விருப்பமானது), சிறிது புதிய எலுமிச்சை சாறு.

கதா பானம் தயாரிப்பது எப்படி?

முதலில் கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டையை நன்றாக பொடியாக மாற்றிக்கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதில், துளசி இலைகளை சேர்த்து, 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். இப்போது கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்க்கவும். உடனே இஞ்சியை சேர்த்து தண்ணீர் கொதிக்கவிட்டு, தண்ணீர் பாதியாகக் குறைந்த பிறகு திராட்சையும் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் தேன் அல்லது வெல்லம் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

Read More : Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

Job | இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.1,40,000 வரை சம்பளம்..!!

Fri Mar 29 , 2024
சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Executive (Architecture) – 3 பணி: Junior Executive (Engineering Civil) – 90 பணி: Junior Executive (Engineering Electrical) – 106 பணி: Junior Executive (Electronics) – 278 பணி: Junior Executive (Information Technology) – 13 கல்வித்தகுதி […]

You May Like