fbpx

அதிகாரப்பூர்வ அறிவிப்பு…! வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்…!

வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா வியாழக்கிழமை மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பை விடுத்ததாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம். டிசம்பர் 10, 2020 அன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டிடம் தரமான கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது என மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 1927 இல் கட்டப்பட்டது. தற்போது 96 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல ஆண்டுகளாக, பழைய கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை. நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தி மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் அடிப்படையில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

Vignesh

Next Post

மாணவர்களே கவனம்...! கல்லூரி முதலாம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Fri May 19 , 2023
இணையத்தளம் வாயிலாக இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் முதல் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணரக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் ( Admission Facilitation Centre AFC ) மூலம் விண்ணப்பிக்க தமிழக […]

You May Like