fbpx

“தமிழில் பெயர் வைத்தால் ரூ.5000 பரிசு.. தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை” – பாமக -வின் நிதி நிலை அறிக்கை.!

ஒவ்வொரு வருடமும் மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தங்களது நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. மாநில மற்றும் மத்திய அரசின் கொள்கைகளில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் பாமக நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் நிழல் நிதி நிலை அறிக்கையில் மாணவர்களின் கல்வி பெண்கள் நலம் கேஸ் மானியம் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் முதியவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை தொகையை குறித்தும் தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான திட்டங்களும் பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும் மத்திய அரசு அமல்படுத்துவதாக சொல்லப்படும் குடியுரிமை திருத்த மசோதா தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாமக வெளியிட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் சில முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாது என தனது அறிக்கையில் பாமக குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு இந்தத் திட்டத்தின் படி ஒரு பவுன் தங்கமும் 50,000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி வழங்கும் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது. மேலும் தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தமிழில் பெயர் வைக்கப்படும் வணிக வளாகங்களுக்கு 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் பாமக நிழல் நிதி அறிக்கை தெரிவித்துள்ளது.

Next Post

தினமும் இரவில் இதை ட்ரை பண்ணி பாருங்க.! மேஜிக் போல தொப்பை காணாமல் போகும்.!

Wed Feb 14 , 2024
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை என்பது பலருக்கும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர். இதற்கு முறையான உடற்பயிற்சி இல்லாததும், சரியான உணவு பழக்கங்கள் இல்லாமல் இருப்பதுமே பெரும் காரணமாக இருக்கிறது. மேலும் இந்த தொப்பை கொழுப்பை குறைக்க உணவு முறைகளிலும், அன்றாட வாழ்க்கை முறைகளிலும் ஒரு சில செயல்களை செய்ய வேண்டும். குறிப்பாக இரவில் […]

You May Like