fbpx

போக்சோ வழக்கு.., தண்டனைக்கு முன் எடுத்த விபரீத முடிவு!!!

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போக்சோ வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டவர் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை. 53 வயதான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சுமார் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சுடலைக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்பதை அறிந்த சுடலை நீதிமன்ற வளாகத்திலேயே முன்கூட்டியே விஷம் குடித்திருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அன்புச்செல்வி உத்தரவிட்டார.

விஷம் அருந்திய சுடலை நீதிமன்ற வளாகத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்ததார், காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுடலை உயிரிழந்தார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தண்டனை அறிந்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

கருப்பு பணம் நிறைய இருக்கு .., ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம்!! கேரளாவில் நடந்த சம்பவம்..!

Fri Dec 23 , 2022
கோவை சரவணம்பட்டி சேர்ந்த மோட்டார் மெக்கானிக் திருவேங்கடசாமி, இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார் அப்பொழுது கேரளாவை சேர்ந்த மணிகண்டன் எனது முதலாளி கார்த்தி என்பவர் கருப்பு பணம் நிறைய வைத்துள்ளார். ஆகையால் நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக கூறியுள்ளார் இந்த சமயத்தில் திருவேங்கடசாமி பணம் […]

You May Like