fbpx

ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயில் விஷத்தன்மை ஏன்!… புற்றுநோயை ஏற்படுத்த என்ன காரணம்..!

வேலை தேடி புதுச்சேரி வந்துள்ள வட மாநில தொழிலாளர்கள் சிலர், புதுச்சேரி கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் பஞ்சு மிட்டாய் தயார் செய்து விற்கின்றனர். பிங்க், ஊதா, மஞ்சள் என பல வண்ணத்தில் பஞ்சு மிட்டாய்களை விற்பதால் குழந்தைகள் சிறுவர்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள், அடர் ரோஸ் கலரில் இருந்ததால் உணவு பாதுகாப்பு துறைக்கு சந்தேகம் வலுத்தது. அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கோரிமேடு பகுதியில் பஞ்சுமிட்டாய் விற்ற வட மாநில தொழிலாளியை பிடித்து பஞ்சுமிட்டாயை வாங்கி ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர்.

அப்போது பஞ்சுமிட்டாயில் தடை செய்யப்பட்ட’ரோடமின் பி’ என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறமி ஊதுவத்தி குச்சியின் கடைசி பகுதியில் நிறமூட்ட பயன்படுத்தப்படுவது என்பதும், இவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விஷத்தன்மை கொண்ட நிறம், மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என கண்டறிந்தனர். ‘ரோடமின் பி’ ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் இந்த நிறமிகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் வடமாநில தொழிலாளர்கள் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

பிடிப்பட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சதிஷ்பாபு முகரியா 21, என்பவரிடம் இருந்து பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சதிஷ்பாபு முகரியாபோன்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பது தெரியவந்தது. பஞ்சுமிட்டாய் விற்ற சதிஷ்பாபு முகரியா மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘பஞ்சுமிட்டாய்களை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட ‘ரோடமின் பி’ என்ற விஷ நிறமி இருப்பது தெரியவந்தது. இது புற்றுநோயை உருவாக்கும் விஷம். ஊதுபத்தியின் கடைசி பகுதியில் நிறம் ஏற்ற பயன்படுத்தும், தொழிற்சாலை டை. இதை உட்கொண்டால் கல்லீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் குழந்தைகளுக்கு ரோஸ் கலரில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை வாங்கி தராதீர்கள். பஞ்சுமிட்டாய் விற்ற வாலிபர் பிடித்து போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

Kokila

Next Post

’ஒமிக்ரான் வகை வைரஸ் அதிகளவில் உருமாற்றம்’..!! பாதுகாப்பா இருங்க..!! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை..!!

Thu Feb 8 , 2024
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும், ”இந்த வகை தொற்றால் […]

You May Like